கிட்டத்தட்ட இரண்டரை வருடங்களுக்கு பிறகு எழுதும் முதல் பதிவு..!இந்த வாழ்க்கை டயர் தான் எவ்ளோ வேகமா சுத்துது.எங்க தாத்தா ஊருக்கு போற பஸ்ல கடைசி சீட்ல உக்காந்து போற மாதிரி அப்பப்போ தூக்கி தூக்கி போட்டாலும் பயணம் பல வித்தியாசமான அனுபவங்களை சுவாரஸ்யமாக அள்ளிதந்தே செல்கிறது.
நெருங்கிய நட்புகளிடம் வெகு நாட்களுக்கு முன்னதாக தமிழ்ல ப்ளாக் எழுத போற ஐடியாவ சொன்னதாக ஞாபகம். எழுதுற சூழ்நிலை இல்லைனு சொல்றத விட சோம்பேறித்தனம் ஏறிபோச்சுனு தான் சொல்லணும்.என்ன எழுத போறோம் அப்டின்னு யோசிச்சு தெய்வதிருமகள் கிருஷ்ணா மாதிரி குழம்பி போன நேரத்துல வழக்கம் போல எதனாச்சும் எழுதுவோம்னு ஆரம்பிச்சாச்சு.
மதுரைய விட்டே வெளிய போகாதவன பாத்து வேலை கெடச்ச உடனே திடீர்னு மும்பைக்கு சென்று வா மகனே அனுப்பிவிட்டாங்க.
இரண்டு வருடங்கள்--
ஸ்கூல், காலேஜ்க்கு அப்புறம் நல்ல நட்புக்கள் அமையுறது இல்லனு நெனச்சுட்டு இருந்தவன செவுள சேத்து அறைஞ்ச மாதிரி கிடைத்த நட்புகள்;
கெடைச்ச வேலைய சந்தோஷமா பாத்துட்டே வேணும்ன்ற வாழ்க்கையா தேட சொல்லிகொடுத்த நாட்கள்;
தேசாந்தரியாக எங்க போறோம்னு தெரியாம பயணப்பட்ட ஊர்கள்;
தமிழ் பேசுற மக்களை..ஏன் TN Registration ஓட ஒரு வண்டிய பாத்தா கூட சொந்த ஊர் பத்தி வர நினைவுகள்;
நல்ல சோறு சாப்டணும்னு மைல் கணக்கில் அலைந்த பொழுதுகள்;
சீன் போட்டு அடுத்தவன விட நாம பெரிய அறிவாளினு காட்டுறது எவ்ளோ பெரிய முட்டாள்தனம்னு புரிந்த தருணங்கள்;
முதுகிற்கு பின்னால் பேச ஆயிரம் இருந்தும் நண்பன, தோழிய எங்கயும் விட்டு கொடுக்காம பேசிய நிமிடங்கள்;
பெத்தவங்க பெருமை படுற அளவுக்கு வாழ்க்கைல செஞ்ச ஒன்னு ரெண்டு நல்ல விஷயங்கள்;
எனக்கு எல்லாம் தெரியும்னு நெனச்சு போனவன எனக்கு எதுவுமே தெரியாதுனு புரிய
வச்சது;
நல்லவன்/கெட்டவன் - அறிவாளி /முட்டாள் இத தாண்டி அன்பு பாரட்ட தெரிஞ்சா போதும்னு உணர்ந்தது ;
எவ்ளோ பிரச்சனை இருந்தாலும் அசால்ட்டா நம்பிக்கை சொல்ல, வாழ்க்கைக்கு உயிர் நண்பர்கள் கிடைத்தது;
எவ்ளோ பிரச்சனை இருந்தாலும் அசால்ட்டா நம்பிக்கை சொல்ல, வாழ்க்கைக்கு உயிர் நண்பர்கள் கிடைத்தது;
ஏழு வருடமாக கூடவே இருந்த நண்பன் கடைசிநாள் வழியனுப்ப வரும்பொழுது பிரிய மனமில்லாமல் மொத நாள் ஸ்கூல்ல சேர்த்த பையன போல திரும்பி திரும்பி பாத்துட்டே போன நொடிகள்; இன்னும் பல நினைவுகள்...
மும்பை வாழ்க்கை என்றும் நினைவில் பச்சை பசேல் என செழுமையாக அழியா நினைவுகள்.!
ரைட்டு.இத்தோட நிப்பாடிக்குவோம்..இதுக்கு நிலா...அவலாஞ்சி...சாக்லேட் ஃபேக்டரி..கூட பரவாயில்லனு தோணுது.!
ரைட்டு.இத்தோட நிப்பாடிக்குவோம்..இதுக்கு நிலா...அவலாஞ்சி...சாக்லேட் ஃபேக்டரி..கூட பரவாயில்லனு தோணுது.!