Saturday, January 18, 2014

ஹாய் மாலினி...நான் இத சொல்லியே ஆகணும்.!

                  டேய் கார்த்தி.இன்னைக்கு மொத நாள்.சீக்கிரம் எந்திரிச்சு கெளம்புடா...ராத்திரி ஃபுல்லா இந்த பாழாப்போன மொபைல... என காலையிலயே தனது அர்ச்சனையை ஆரம்பித்தாள்  அன்பு அம்மா.!

"waaat maa..! itz juz 7 on a monday morning, இப்போ இருந்தே இந்த டைம்க்கு பழகுனா நாளைக்கு எப்புடி US, UK ன்னு போனா செட் ஆகும்" ன்னு சம்பந்தமே இல்லாம உளறிகிட்டு எழுந்தான் கார்த்தி.

"சர்வீஸ்க்கு போன பைக் இன்னும் வரல டா. இன்னிக்கு நீ பக்கத்து வீட்டு  அங்கிளோட கார்ல  தான் போகனும்..ஞாபகம் இருக்குல.!  என தன் பங்குக்கு திங்கள்கிழமையின் காலையினை சிறப்பித்தார் அப்பா.

"எல்லா வருஷமும் ஏன் தான் இந்த sunday க்கு அப்புறம் mondayவ காலண்டர்ல பிரிண்ட் பண்றாங்களோ..?!?  Dadd...No Probs, I can manage today".
"ம்மா ..என்னோட டிரஸ் டேபிள்ல இருக்கு கொஞ்சம் அத அயர்ன் பண்ணிடு..10 நிமிஷத்துல ரெடி ஆகிருவேன் " ன்னு சொல்லிட்டு இருந்தப்பவே அம்மா  அயர்ன் பண்ண ஆரம்பிச்சுட்டாங்க.
ஃலைப் எப்போ எல்லாம் செமையா இருக்குன்னு நினைக்கிறமோ அன்னிக்கு தான் இந்த மண்டே வருதுன்னு தனக்கு தானே பொலம்பிகிட்டே குளிக்க போனான்.

"தலைய காய வச்சிட்டு அப்புறம் சீவு டா"
என்று அம்மா சொன்னத காதுல வாங்காம ஈரத்தலைய வாருனான்.
"கருப்பா இருந்தாலும் கலையா தான் மச்சி இருக்க...த்ரிஷா உனக்கு தான்"னு
 வழக்கம் போல கண்ணாடிய பாத்து Confidence ஏத்திட்டு அப்படியே ரெண்டு பாடி ஸ்ப்ரேவ கலந்து அடிச்சான்.
 "ம்மா..மணி 7.40 ஆச்சு சாப்பாடு ரெடியா.? இல்லனா நான் போய் சாப்டுக்குறேன்"

"டேய் எருமமாடு..5 நிமிஷம் பொறு அப்படியே ரெண்டு இட்லிய பிச்சு போட்டுட்டு போ" ன்னு சொல்லிட்டே அம்மா  ஊட்ட, அரைகுறையாக சாப்பிட்டு இருக்கும் போதே பக்கத்து வீட்டு ஆன்ட்டி என்ட்ரிய போட்டாங்க.

இது வீட்டுக்குள்ள வந்தா பெருமை பேசியே கொல்லுமே..ம்மா..சாப்பாடு போதும்ன்னு சொல்லிட்டு பேக் எடுக்க கிளம்பினான்.

"ஏன்டா கார்த்தி இன்னுமா ரெடி ஆகல, அங்கிள் ஆபீஸ் கெளம்பிட்டார்டா, உனக்காக தான் வெய்டிங்",
"இதோ கிளம்பிட்டேன் ஆன்ட்டி"
"கார்த்தி அம்மா..இந்த தடவையும் என் பையன் தான் ஃபர்ஸ்ட் ரேங்க், தெரியுமா ?!?" என அவங்க பெருமை பேச ஆரம்பிக்க
"ஆன்ட்டி..எனக்கு தெரிஞ்சு எல்லா ஸ்கூல்ளையும் இப்போ ஃபர்ஸ்ட் ரேங்க் மட்டும் தான் குடுக்குறாங்க போல..எந்த அப்பா அம்மாவ கேட்டாலும் இதையே தான் சொல்றிங்க"ன்னு ஆன்ட்டி க்கு மொக்க கொடுத்துட்டு எதையோ சாதிச்சது போல கார்ல ஏறினான்.

"அப்பா...சாயங்காலம் கொஞ்சம் வேலை இருக்கு...நான் லேட்டா தான் வருவேன். Bye. ம்மா...போய்ட்டு வரேன்.bye! "

கார் கிளம்பியது.

"கார்த்திக் இங்கயே நிப்பாட்டிக்கவா  இல்ல உள்ள வரைக்கும் வரணுமா. ?

"அங்கிள்...நீங்க ஸ்கூல் உள்ள எல்லாம் வர வேணாம்..நானே போயிடுவேன்"ன்னு சொல்லிட்டு தன் வகுப்பறை நோக்கி நடந்தான் கார்த்திக். ஆமா நம்ம கார்த்தி ஃபர்ஸ்ட் STD படிக்கிற பையன்.
அன்று பள்ளியின் முதல் நாள். ஸ்கூல்குள்ள என்ட்டர் ஆனா உடனே அவன் கண்கள் யாரையோ கூர்ந்து தேடின.

"யார மச்சி தேடுற"என கேட்டான் கார்த்தியின் புதிய நண்பன் கணேஷ்.

"மாலினி இன்னிக்கு வரலையா மச்சி?" 

"யாரு டா அவ".?

சொல்ல தொடங்கினான் கார்த்திக் தனது கதையை.!

"மாலினி", நம்ம ஸ்கூல் UKG - C ல படிக்குற பொண்ணு. அழகுனா அழகு அவ்வளோ அழகு. சும்மா பாக்குறதுக்கு அப்படியே ஒரு கியுட்டான பார்பி டால் மாதிரி இருப்பா.

ஒழுங்கா Rhymes சொல்லலன்னு கிளாஸ்க்கு வெளியில நிப்பாட்டுனப்ப  தான் முதல் தடவ மாலினிய பார்த்தேன். ஒரே பார்வை பார்த்தா...மின்னல் மாதிரி அப்புடியே கண்ணு வழியா உள்ள போய் இதயத்தை தாக்கி மனச தூக்கிட்டு போயிடுச்சி அந்த பார்வை .. ஆமா !! i fell in love with Malini !!. மழை பெய்யும் போது transformer ல ஒரு தீப்பொறி வருமே, அந்த மாதிரி ஒரு ஸ்பார்க். அப்போவே முடிவு பண்ணிட்டேன் வாழ்ந்தா அது இவளோட தான்னு. மச்சி, அவள பாக்கும் போது எல்லாம் மனசுல இளையராஜா மியூசிக்ல 'Twinkle Twinkle Little Star' பாட்டு தான். ஆசை மிட்டாய்ல இருந்து அப்பளம் வரைக்கும் எத பாத்தாலும் அவ முகம் தான்டா தெரியுது.

முதல் சந்திப்புலயே அந்த Rhymes ah  அவளுக்கு சொல்லி குடுத்து கிளாஸ் குள்ள அவள அனுப்பி வச்சேன் . அதுக்கு அப்றோம் 2nd மீட்டிங்ல 2 tables சொல்லி குடுத்து impress பண்ண ட்ரை பண்ணேன். ஆனா அவ எதுக்குமே என்கிட்டே ஒரு வார்த்த கூட பேசலை. வேற வேற ஸ்டேட் பொண்ணுங்க எல்லாரும் நம்ம ஸ்கூல்ல படிக்கிறதுனால அவளுக்கு தமிழ் தெரியுமான்னு கூட தெரியல.

ஒரு நாள் வழக்கத்துக்கு மாறா நம்ம கிளாஸ்ல ஒரு தேன்குரல் கேட்டுச்சு. ஓடிப்போய் ஜன்னல் பக்கம் எட்டி பாத்தேன். Yes..என்னோட ஏஞ்சல் மாலினி தான்.

"என்ன வேணும்" ..? ன்னு கேட்டேன்.
"நீங்க தமிழா...நானும் தமிழ் தான்"
"I'm கார்த்திக், உங்க பேரு" ..? '
"மாலினி...ரெண்டு chalkpiece கிடைக்குமா காழ்த்திக் ?".

ரெண்டு என்ன அவ சிரிப்புக்கு 2000 chalk piece தரலாம். தரையிலயே  மிதக்குற ஒரு ஃ பீல் மச்சி...கோடி ரூவா குடுத்தாலும் கெடைக்காது. அந்த நேரத்துல சூர்யா வந்து ஓங்கி அடிச்சாலும் 1.5 டன் வெயிட்லாம் தூசி மாதிரி தெரியும் டா.

"சரி நான் வரேன் காழ்த்திக்" ன்னு சொல்லிட்டு கிளம்பினா.

6 மாசம் இப்டியே அப்போ அப்போ பாத்துட்டு பேசிட்டு ஓடுச்சு . ஒரு நாள் அவகிட்ட ப்ரோபோஸ் பண்றதுன்னு முடிவு பண்ணேன்.கண்ணாடி முன்னால நெறைய தடவ சொல்லிபாத்ததுல இது தான் simple and  best ah இருந்துச்சு.

                    Hai Malini..நான் இத சொல்லியே ஆகணும்...உன்னை எனக்கு அவ்வளவு பிடிக்கும் and I'm in love with you.!!

என்னோட பர்த்டேக்கு எடுத்த spiderman டிரஸ்ஸ போட்டுட்டு ஒரு eclairs சாக்லேட் வாங்கிட்டு Usain Bolt மாதிரி ஓடிப்போய் Hai Malini..நான் இத .... அப்படின்னு சொல்ல ஆரம்பிச்ச ஒடனே

                   அண்ணா ..!! உங்களோட UKG Rhymesபுக் இருந்தா ...தரீங்களா அண்ணா ?!?

டம் ன்னு ஒரு சத்தம் .நம்ம லவ் பண்ண பொண்ணு நம்மள லவ் பண்ணலன்னு தெரிஞ்ச உடனே இந்த உலகமே ஒரு நிமிஷம் நின்றுச்சு மச்சி. ஆனாலும் 'There is life after love failure ' ன்னு அறிஞர் அட்லீ சொன்னது ஞாபகத்துக்கு வந்துச்சு. அதுனால அவ நல்லா இருக்கனும்ன்னு Pray பண்ணிட்டு அவ கிட்ட என்னோட இங்கிலீஷ் புக் ah குடுத்துட்டு வந்துட்டேன். இதோட ஒரு வருஷம் ஆச்சு மச்சி அவகிட்ட பேசி . என் அஞ்சல மச்சி அவ".

"மச்சி..அங்க பாரு...உன் ஆள் தப்பா IInd STD கிளாஸ்க்குள்ள  போறா டா" என கணேஷ் குறுக்கிட்டான்.

கார்த்திக்..அவளை நோக்கி ஓடினான்.

                        Hai Malini...நான் இத சொல்லியே ஆகணும்...ம்ம்..உங்களோட I std  rhymesபுக் இருந்தா...தரீங்களா?!?

நாங்களும் எத்தன வருஷம் தான் 1st std லயே பொழுத ஓட்றது.!!

Tuesday, December 31, 2013

சரி..எதாவது எழுதுவோம்-2.!!

                  அறிவு வளர்க்க இந்த பதிவில் எதையாவது தேடும் நட்புகள் ப்ரௌசரின் North East திசைல இருக்க சிவப்பு கலர் x பட்டன பாரபட்சம் பார்க்காமல் தயவுசெய்து  அழுத்தவும். உங்க நல்லதுக்கு தான் சொல்றேன்...அப்புறம் உங்க இஷ்டம்.!

ஹீரோ பேரு கார்த்திக். ஹீரோயின் ஜெஸ்ஸி. இந்த ரெண்டு பேர  வச்சு ஒரு லவ் ஸ்டோரி டெவலப் பண்ணலாம்ன்னு யோசிச்சா கௌதம் மேனன் நம்ம யோசிக்கிற கதைய அப்படியே அல்ரெடி படமா எடுத்திருகாப்ள. சரி கவிஜ எழுதலாம்ன்னு 'நிலா நீ வானம் காற்று...' இத மாத்தி மாத்தி போட்டு மூணு புள்ளி, ஒரு ஆச்சர்யகுறி, ஒரு அடடே சேர்த்து பாத்தா நம்ம வாலி ஏற்கனவே அப்படி ஒரு கவித எழுதிருக்காரு. ஒரு வேளை இத தான் Great men think alike ன்னு வில்லியம் வோர்ட்ஸ்வோர்த் சொல்லிருக்காரோ ?!? சரி நம்ம மேட்டர்க்கு வருவோம்.!

இது அய்யோ அம்மா கம்பி வாய மூட்ரா தம்பி வழங்கும் 'சூட மிட்டாய்' பற்றிய டெக்னாலஜி ஆப் இந்தியா ரிப்போர்ட். 


சூட மிட்டாய்...!! 


                     தமிழகத்தின் தெற்கு  மாகாணங்களில் 1990களில் பெட்டி கடைகள் எங்கும் 5 பைசா என்று தமிழக அரசால் நிர்ணயகப்பட்ட விலையில் வட்ட வடிவில் விற்கப்பட்ட மிட்டாய் ஆகும். இதற்கு பெயர் காரணம்  திருக்குறளின் 134 ஆம் அதிகாரத்தில் திருவள்ளுவரின் பங்காளியால் விளக்கப்பட்டுள்ளது. குளிரச்சியூட்டும் தன்மை கொண்ட இந்த மிட்டாய் பற்றிய வரலாற்று குறிப்புகள் மதுரையை சுற்றியுள்ள கல்வெட்டுகளில் இன்றளவும் காணப்படுகிறது. 
சூடம் எவ்வாறு நெருப்பை சட்டென்று பற்றிகொள்கிறதோ அது போல உண்பவரின் நாவில் ஒட்டி அதன் சுவையை மனதில் சட்டென்று  பற்ற வைக்கும் தன்மை கொண்டது சூட மிட்டாய் என்று முட்டி முட்டி சாமியார் முட்டிபுராணத்தில் உவமை குறியீடு எழுதி வைத்துள்ளார். 

1990 களில் பெரும்பாலான பெட்டிகடைகளில் வாழைப்பழம் கட்டிய கயரின் அருகில் ஒரு வெள்ளை நிற பிளாஸ்டிக் பையில் அழகான முறையில் பேக்கிங் செய்யப்பட்டு சூட மிட்டாய் தொங்கவிடபட்டு இருக்கும். வாயில் போட்ட உடனே குளிர்ந்த உணர்வை கொடுத்து கரையும் தன்மை கொண்ட இந்த மிட்டாய், நமது ஈகோ கரைந்தால் தான் எல்லோர் மனதையும்  குளிர்விக்க முடியும் என்ற மேலான தத்துவத்தை முன் வைக்கிறது.

கவரினை பிரித்து மிட்டாய்யினை வளர்ப்பு பிராணிகள் போல நக்கும் விளம்பரங்கள் இல்லாமலயே இதனை விற்க முடிந்த Marketing Strategy இன்றளவும் யாவருக்கும் புலப்படவே இல்லை. 72 கவர்களை பிரித்து உள்ளே மிட்டாய் இருக்கிறதா இல்லையா எனத்தேடி நேரத்தை வீணடிக்காமல் கடைக்காரரே மிட்டாயினை தனியாக எடுத்து எண்ணிக் கொடுக்கும் அளவுக்கு நுட்பமான முறையில் இதன் பேக்கிங் அமைந்து இருப்பது இதன் மற்றொரு சிறப்பு. 

 கடைக்கு செல்லும் அனைவருக்கும் சில்லறை இல்லை என்று சொல்லும் பழக்கம் இல்லாத வணிகர்கள் சூட மிட்டாய் கொண்டு அதை ஈடு கட்டினர். கடும் வெயிலில் Coco Cola, Pepsi, பெருவிரல்கள் மேல் (Thumbs Up ) என்று உடலை செம்மைபடுத்தும் குளிர்பானங்கள் இல்லாத காலகட்டத்தில் 4 சூட மிட்டாய் உண்ட பிறகு தண்ணீர் குடித்து தங்கள் உடலையும் மனதையும் குளுமை படுத்தி கொண்டனர். கிரிக்கெட் விளையாடும் சிறார்கள் தங்கள் சட்டை பைகளில் 1 ரூபாய்க்கு 20 சூட மிட்டாய் வாங்கி ஓவருக்கு ஒரு மிட்டாய் வீதம் அன்றைய காலகட்டதிலயே 20/20 விளையடினர். இவ்வாறு அவர்கள் கணக்கு  பாடத்தினையும் எளிதில் கற்றனர். McDonalds, Dominos, KFC என்று ஸ்டிக்கர் ஒட்டினால் தான் அரிசி கூட சாப்பிடுவேன் என்று அடம் பிடிக்கும் குழந்தைகளின் மத்தியில் SRS கடலை மிட்டாய் கவரில் வைத்து விற்றாலும் வாங்கி சூட மிட்டாயினை சுவைத்தனர் அன்றைய சிறுவர்கள்.


இவ்வளவு சிறப்புகள் நிறைந்த இந்த அறிய மிட்டாய், 21 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலயே அழிவினை சந்திக்க ஆரம்பித்தது. டாலரின் விலை ஏற்றம் கண்ட காரணத்தினால் Boomer போன்று ஸ்டாண்டர்ட் ஆன விலையில் விற்க முடியாமல் திணறின பல சூட மிட்டாய் நிறுவனங்கள். 10,20 பைசா என்று விலை ஏற்றம் கண்டவுடன் வெங்காயம் போல வாங்க தயங்கினர் மக்கள். இந்த மிட்டாயினை அடுத்த தலைமுறை சுவைக்க வேண்டும் என்ற நல்லெனத்தில் 'POLO' என்ற பன்னாட்டு நிறுவனத்திற்கு செய்முறையினை இலவசமாக கற்று கொடுக்க முடிவு செய்தனர் போதி தர்மரின் புத்திரர்கள். அவர்களுக்கு நமது கை பக்குவம் வந்து விட கூடாது என்ற காரணத்தினால் உளுந்த வடை போன்று ஓட்டை போட்டு நமது Brand இனை நிலை நாட்டினர். தற்பொழுது பல்வேறு நிறுவனங்களால் 100 ருபாய் வரை விற்கப்படும் இந்த சூட மிட்டாயினை கண்டுபிடித்தது போதி தருமர் என்ற தமிழர் என்று பெருமிதம் கொள்வோம். 

இதன் செய்முறை விளக்கம் பற்றி விஜய் தொலைகாட்சியில் கும்கி யானையினை முகாமிற்கு அனுப்பிய பிறகு ஒரு ஞாயிற்று கிழமை ஒளிபரப்பப்படும் என எதிர்பார்க்கபடுகிறது. 

நன்றி...இது அய்யோ அம்மா கம்பி வாய மூட்ரா தம்பி வழங்கிய  'சூட மிட்டாய்' பற்றிய டெக்னாலஜி ஆப் இந்தியா ரிப்போர்ட்.!

Saturday, December 28, 2013

சரி..எதாவது எழுதுவோம்.!!

முன்குறிப்பு:

மொத லைன் வாசிக்கும் போதே இது கொடூர மொக்கை அப்டின்னு உங்க ESP சொல்லுச்சுனா நேராக கடைசி பகுதிக்கு செல்லவும்.

                      வாழ்க்கன்றது என்னனா...அப்படி எதுவும் 2014 காலண்டர் எல்லாம் பாத்து தத்துவம் எதுவும் இங்க கொட்ட போறது இல்ல. ஏதோ இன்னிக்கு வழக்கத்த விட ரொம்ப வெட்டியா இருக்கோமே, எல்லாரும் வாழ்க்கை வாழ்க்கைனு மூஞ்சிபுக், வாட்சப், ட்விட்டர்ன்னு  வளைச்சு  வளைச்சு ஸ்டேட்டஸ் போடுறாங்களே  நம்மளும் கொஞ்சம் இந்த வாழ்க்கைய பத்தி ரெண்டு வரில ஸ்டேட்டஸ் போடுவோம்னு தோணுச்சு. 


நம்ம பிரைனுக்கு பரீட்சைல படிச்ச கேள்விக்கு பதில் யோசிக்கவே மூணு மணிநேரம் ஆகும். புதுசா யோசிக்கலாம்னா எங்க போறது...ஒரு மண்ணும் தோணல.நம்மளும் பேசாம பீர்பால், தெனாலிராமன் கதைல வர கடைசி வரி எடுத்து அப்துல் கலாம் சொன்னாரு, A.K அகமது சொன்னாருன்னு போட்டா தான் வாழ்க்க ஸ்டேட்டஸ் போட முடியும் போல.


ஆனா இந்த அறிவாளி/நல்லவன் சீன் போடுறதுக்காக இப்படி எதாவது யோசிக்கும் போது தான் நம்மையும் அறியாம நெறைய விஷயம் மனசை தொட்டு நெருடி வருடி செல்கிறது.மிர்ச்சி சிவா டான்ஸ் மாதிரி அலடிக்காம வாழ்க்கை போய்ட்டு இருக்குன்னு நெனச்சுட்டே இருக்கும் போது தான் ரங்கு ரக்கர ரங்கு ரக்கர ன்னு TR  மாதிரி நம்மளையும் ஆட வச்சுருது.


பத்தாவது முடிச்சுட்டு +2ல என்ன குரூப் எடுக்குறதுன்னு குழப்பம். அப்புறம் +2 முடிச்சுட்டு என்ன பண்ண போறோம்னே தெரியாம எல்லா காலேஜ்லையும்  அப்ளிகேஷன் வாங்கி வச்சுட்டு எந்த காலேஜ் போறதுன்னு ஒரு குழப்பம். நல்ல காலேஜ் கெடைச்சாலும் எந்த கோர்ஸ் எடுக்குறதுன்னு குழப்பம். காலேஜ் முடிச்சு வேலைக்கு போனா இந்த வேலை நமக்கு செட் ஆகுமான்னு குழப்பம். இதுக்கு அப்புறம் இருக்க ஸ்டேஜ்ல என்ன குழப்பம் இருக்குன்னு அனுபவிச்சு பாத்தா தான் தெரியும். நம்ம நெனச்சது எல்லாமே ரூம்ல வச்ச வண்டி சாவி மாதிரி நமக்கு எப்போ வேணுமோ அப்போ மட்டும் நமக்கு கெடைக்குறதே இல்ல.


இந்த வாழ்க்கை..!! வைகை புயலுக்கு நாலா பக்கமும் லொஜக் மொஜக்குன்னு விழுகுற மாதிரி ஒரு பேட்ட மட்டும் கைல கொடுத்துட்டு '6' பால்லயும் ஒரே நேரத்துல போடுது ; 120 ரூவா வாங்கிட்டு சில நேரம் சிவாஜி படம் ஒட்டுது, பல நேரம் ஒண்ணுமே புரியாத கடல் படம் காட்டுது; Dial-up கன்னக்க்ஷன்ல  Youtube வீடியோ பாக்குற மாதிரி சில நேரம் ஒரே எடத்துல சுத்துது, சில நேரம் நமக்கு விளம்பரம் கூட Buffer ஆக மாட்டேங்குது; 



எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்குது.!! 

                     தெரியாம # பட்டன் அமுக்குனதுகாக மூணு  மாசமா சேத்து வச்சுருந்த 30 ரூவா balance ஒரே நாள்ல caller tune  ஆக்டிவேட் பண்ணி புஸ் ஆகுறது, 125 ரூவா குடுத்து மெசேஜ் பூஸ்ட்டர் லாம் போட்டாலும் airtel காரனுங்க மட்டுமே மெசேஜ் அனுப்புறது, தீபாவளிக்கு வந்த நாலு படத்துல நம்ம போய் கூட்டத்துல 2 ஹவர் நின்னு டிக்கட் எடுத்து பாக்குற படம் மட்டும் காட்டு மொக்கையா இருக்குறது, இன்டர்வல்ல வாங்குன ஐஸ்ச  சாப்புடறது குள்ள கூட்டத்துல எவனாவது அத தட்டி விடறது,  ஆபீஸ்ல இருக்க அழகான புள்ளைங்க எல்லாம் Activa'ல வர அம்பி கூட மட்டும் பேசுறது ,  ஒரு காப்பிய மட்டும் குடிச்சிட்டு விடிய விடிய யாரடி நீ மோகினி தனுஷ் மாதிரி உக்காந்து வேலைய பாத்துட்டு கண்ணு வீங்கி  அடுத்த நாள் போனா..என்ன மச்சி நைட் எல்லாம் whatsapp ah ன்னு கேட்டு கடுபேத்துறது, சீரியஸ்ஆ நம்ம ஒரு மேட்டர் சொல்லும் போது எல்லாரும் குபீர் சிரிப்பு வெளிப்படுத்தி நமக்கு பல்பு குடுக்குறது, எனக்கு மட்டும் தான் லக் இல்லைன்னு பீல் பண்றது...ச்ச எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்குது.?!?

ஆனா  இப்படி எதாவது மொக்கயா நடக்குறப்ப மட்டும் குறை சொல்லும் மனசு நமக்கு favor ah எதாவது நடக்குறப்ப இந்த கேள்விய கேக்க மறந்துருது..!


முன் குறிப்புல சொன்ன கடைசி  பகுதி வந்துருச்சு.!


மச்சான் சாம்பார் சூப்பர் டா..!!அப்படின்னு பேச்சுலர் ரூம்ல வச்ச புளிக்குழம்பு பாத்து நண்பன் சொல்ற மாதிரி தான் வாழ்க்கையும், புளிக்குழம்பா சாம்பாரான்னு யோசிக்கிறத விட்டுட்டு சாப்பாடு செம்ம மச்சின்னு கெடைச்ச சாப்பாட நிம்மதியா சாப்டுட்டு அடுத்த வேளை சாப்பாட்டுக்கு வேலைய பாக்க வேண்டியது தான்.! 


ஒரு ஸ்டேட்டஸ் ரெண்டு வரி ன்னு யோசிச்சதுக்கு 3 பக்கம் கிறுக்கிருக்கேன். இனிமேல் யாராவது வாழ்க்கைன்னு தத்துவம் போடுங்க.!! 

Saturday, November 30, 2013

நிலா...அவலாஞ்சி...சாக்லேட் ஃபேக்டரி.!

                                     கிட்டத்தட்ட இரண்டரை வருடங்களுக்கு பிறகு எழுதும் முதல் பதிவு..!இந்த வாழ்க்கை டயர்  தான் எவ்ளோ வேகமா சுத்துது.எங்க தாத்தா ஊருக்கு போற பஸ்ல கடைசி சீட்ல உக்காந்து போற மாதிரி அப்பப்போ  தூக்கி தூக்கி போட்டாலும் பயணம் பல வித்தியாசமான அனுபவங்களை சுவாரஸ்யமாக அள்ளிதந்தே செல்கிறது.

நெருங்கிய நட்புகளிடம் வெகு நாட்களுக்கு முன்னதாக தமிழ்ல ப்ளாக் எழுத போற ஐடியாவ சொன்னதாக ஞாபகம். எழுதுற சூழ்நிலை இல்லைனு சொல்றத விட சோம்பேறித்தனம் ஏறிபோச்சுனு தான் சொல்லணும்.என்ன எழுத போறோம் அப்டின்னு யோசிச்சு தெய்வதிருமகள் கிருஷ்ணா மாதிரி குழம்பி  போன நேரத்துல வழக்கம் போல எதனாச்சும் எழுதுவோம்னு  ஆரம்பிச்சாச்சு.


மதுரைய விட்டே  வெளிய போகாதவன பாத்து வேலை கெடச்ச உடனே திடீர்னு மும்பைக்கு சென்று வா மகனே அனுப்பிவிட்டாங்க.

இரண்டு வருடங்கள்--

ஸ்கூல், காலேஜ்க்கு அப்புறம் நல்ல நட்புக்கள் அமையுறது இல்லனு  நெனச்சுட்டு இருந்தவன செவுள சேத்து அறைஞ்ச மாதிரி கிடைத்த நட்புகள்;

கெடைச்ச வேலைய சந்தோஷமா பாத்துட்டே  வேணும்ன்ற  வாழ்க்கையா தேட சொல்லிகொடுத்த நாட்கள்;
தேசாந்தரியாக எங்க போறோம்னு தெரியாம பயணப்பட்ட ஊர்கள்; 

தமிழ் பேசுற மக்களை..ஏன் TN Registration ஓட ஒரு வண்டிய பாத்தா கூட சொந்த ஊர் பத்தி வர நினைவுகள்; 
நல்ல சோறு சாப்டணும்னு மைல் கணக்கில் அலைந்த பொழுதுகள்; 
சீன் போட்டு அடுத்தவன விட நாம பெரிய அறிவாளினு காட்டுறது எவ்ளோ பெரிய முட்டாள்தனம்னு புரிந்த தருணங்கள்; 
முதுகிற்கு பின்னால் பேச ஆயிரம் இருந்தும் நண்பன, தோழிய  எங்கயும் விட்டு கொடுக்காம பேசிய நிமிடங்கள்;
பெத்தவங்க பெருமை படுற அளவுக்கு வாழ்க்கைல செஞ்ச ஒன்னு ரெண்டு நல்ல விஷயங்கள்;
எனக்கு எல்லாம் தெரியும்னு நெனச்சு போனவன எனக்கு எதுவுமே தெரியாதுனு  புரிய 
வச்சது; 
நல்லவன்/கெட்டவன் - அறிவாளி /முட்டாள் இத தாண்டி அன்பு பாரட்ட தெரிஞ்சா போதும்னு உணர்ந்தது ;
எவ்ளோ பிரச்சனை இருந்தாலும் அசால்ட்டா நம்பிக்கை சொல்ல, வாழ்க்கைக்கு உயிர் நண்பர்கள் கிடைத்தது; 
ஏழு வருடமாக கூடவே இருந்த நண்பன் கடைசிநாள் வழியனுப்ப வரும்பொழுது பிரிய மனமில்லாமல் மொத நாள் ஸ்கூல்ல சேர்த்த பையன போல திரும்பி திரும்பி பாத்துட்டே போன நொடிகள்; இன்னும் பல நினைவுகள்... 

மும்பை வாழ்க்கை என்றும் நினைவில் பச்சை பசேல் என செழுமையாக அழியா நினைவுகள்.! 

ரைட்டு.இத்தோட நிப்பாடிக்குவோம்..இதுக்கு நிலா...அவலாஞ்சி...சாக்லேட் ஃபேக்டரி..கூட பரவாயில்லனு தோணுது.!

Sunday, June 5, 2011

naanum Madura kaaran thaan..!

Hey Fellas
                 Finally had a thought of blogging before leaving to Mumbai.Yeah this is the first time i'm leaving my home town for such a long period.Never know how the path of life travels but got to enjoy each and every moment as i always say.
                Madurai a city with its own cultural and heritage values,which carefully ensured no metro culture entered into its veneer. Though quite a few malls and IT hubs were constructed,they remain as the droplets on leaf of lotus to Madurai.People here show real love and affection even to an unknown person. one will definitely love the attitude of the people here. Loads of stuff to share about madurai and people of the suburb.I'm going to really miss a lot of things in Madurai but as everyone say all izz well.

my mind has started thinkin 'once you get your job done live the rest of life peacefully in madurai'.

Miss yo madurai and miss yo all friends.

Monday, March 14, 2011

I'm Back...!!

Hello everyone..!!

       Yes, I know, I keep going off on breaks.but this time a long wait of more than threemonths.I didn't realize it had been that long.I've tried coming back several times but for a variety of reasons haven't been able to step back in.

Had nothing to share these three  months..??Certainly no, so much has happened to share..!!. My life's been really amazing and eventful over these months. So I like to share with you what the last six months entailed in my next posts. This short article is just to say 'i'm back and I'm ready to jump back into the blogging world.

Hope I will continue to post some good articles, information, events and more. Thanks guys for dropping by and have a Nice Day! stay happy, y’all :)

Tuesday, September 7, 2010

I found it !

                 This was the song that I’d heard way back. It used to be played daily on National Network many years back- you know i woud love to see this classical composition almost daily . All these years, I’ve had the tune right at the tip of my tongue, but I never quite managed to find it anywhere. The lyrics I remembered were in tamil sung by  BalamuraliKrishna who comes in middle of the song and also i remembered the celebrities in the song. I googled and googled but didn't find it. Finally when i was hearing CWG theme in you tube i looked for some more National Integrity related videos.Finally to my surprise i found this song "mile sur mera tumara.."     . 

To listen to the song click here .

Signing of now...cya latr.