அறிவு வளர்க்க இந்த பதிவில் எதையாவது தேடும் நட்புகள் ப்ரௌசரின் North East திசைல இருக்க சிவப்பு கலர் x பட்டன பாரபட்சம் பார்க்காமல் தயவுசெய்து அழுத்தவும். உங்க நல்லதுக்கு தான் சொல்றேன்...அப்புறம் உங்க இஷ்டம்.!
ஹீரோ பேரு கார்த்திக். ஹீரோயின் ஜெஸ்ஸி. இந்த ரெண்டு பேர வச்சு ஒரு லவ் ஸ்டோரி டெவலப் பண்ணலாம்ன்னு யோசிச்சா கௌதம் மேனன் நம்ம யோசிக்கிற கதைய அப்படியே அல்ரெடி படமா எடுத்திருகாப்ள. சரி கவிஜ எழுதலாம்ன்னு 'நிலா நீ வானம் காற்று...' இத மாத்தி மாத்தி போட்டு மூணு புள்ளி, ஒரு ஆச்சர்யகுறி, ஒரு அடடே சேர்த்து பாத்தா நம்ம வாலி ஏற்கனவே அப்படி ஒரு கவித எழுதிருக்காரு. ஒரு வேளை இத தான் Great men think alike ன்னு வில்லியம் வோர்ட்ஸ்வோர்த் சொல்லிருக்காரோ ?!? சரி நம்ம மேட்டர்க்கு வருவோம்.!
இது அய்யோ அம்மா கம்பி வாய மூட்ரா தம்பி வழங்கும் 'சூட மிட்டாய்' பற்றிய டெக்னாலஜி ஆப் இந்தியா ரிப்போர்ட்.
தமிழகத்தின் தெற்கு மாகாணங்களில் 1990களில் பெட்டி கடைகள் எங்கும் 5 பைசா என்று தமிழக அரசால் நிர்ணயகப்பட்ட விலையில் வட்ட வடிவில் விற்கப்பட்ட மிட்டாய் ஆகும். இதற்கு பெயர் காரணம் திருக்குறளின் 134 ஆம் அதிகாரத்தில் திருவள்ளுவரின் பங்காளியால் விளக்கப்பட்டுள்ளது. குளிரச்சியூட்டும் தன்மை கொண்ட இந்த மிட்டாய் பற்றிய வரலாற்று குறிப்புகள் மதுரையை சுற்றியுள்ள கல்வெட்டுகளில் இன்றளவும் காணப்படுகிறது.
சூடம் எவ்வாறு நெருப்பை சட்டென்று பற்றிகொள்கிறதோ அது போல உண்பவரின் நாவில் ஒட்டி அதன் சுவையை மனதில் சட்டென்று பற்ற வைக்கும் தன்மை கொண்டது சூட மிட்டாய் என்று முட்டி முட்டி சாமியார் முட்டிபுராணத்தில் உவமை குறியீடு எழுதி வைத்துள்ளார்.
1990 களில் பெரும்பாலான பெட்டிகடைகளில் வாழைப்பழம் கட்டிய கயரின் அருகில் ஒரு வெள்ளை நிற பிளாஸ்டிக் பையில் அழகான முறையில் பேக்கிங் செய்யப்பட்டு சூட மிட்டாய் தொங்கவிடபட்டு இருக்கும். வாயில் போட்ட உடனே குளிர்ந்த உணர்வை கொடுத்து கரையும் தன்மை கொண்ட இந்த மிட்டாய், நமது ஈகோ கரைந்தால் தான் எல்லோர் மனதையும் குளிர்விக்க முடியும் என்ற மேலான தத்துவத்தை முன் வைக்கிறது.
கவரினை பிரித்து மிட்டாய்யினை வளர்ப்பு பிராணிகள் போல நக்கும் விளம்பரங்கள் இல்லாமலயே இதனை விற்க முடிந்த Marketing Strategy இன்றளவும் யாவருக்கும் புலப்படவே இல்லை. 72 கவர்களை பிரித்து உள்ளே மிட்டாய் இருக்கிறதா இல்லையா எனத்தேடி நேரத்தை வீணடிக்காமல் கடைக்காரரே மிட்டாயினை தனியாக எடுத்து எண்ணிக் கொடுக்கும் அளவுக்கு நுட்பமான முறையில் இதன் பேக்கிங் அமைந்து இருப்பது இதன் மற்றொரு சிறப்பு.
கடைக்கு செல்லும் அனைவருக்கும் சில்லறை இல்லை என்று சொல்லும் பழக்கம் இல்லாத வணிகர்கள் சூட மிட்டாய் கொண்டு அதை ஈடு கட்டினர். கடும் வெயிலில் Coco Cola, Pepsi, பெருவிரல்கள் மேல் (Thumbs Up ) என்று உடலை செம்மைபடுத்தும் குளிர்பானங்கள் இல்லாத காலகட்டத்தில் 4 சூட மிட்டாய் உண்ட பிறகு தண்ணீர் குடித்து தங்கள் உடலையும் மனதையும் குளுமை படுத்தி கொண்டனர். கிரிக்கெட் விளையாடும் சிறார்கள் தங்கள் சட்டை பைகளில் 1 ரூபாய்க்கு 20 சூட மிட்டாய் வாங்கி ஓவருக்கு ஒரு மிட்டாய் வீதம் அன்றைய காலகட்டதிலயே 20/20 விளையடினர். இவ்வாறு அவர்கள் கணக்கு பாடத்தினையும் எளிதில் கற்றனர். McDonalds, Dominos, KFC என்று ஸ்டிக்கர் ஒட்டினால் தான் அரிசி கூட சாப்பிடுவேன் என்று அடம் பிடிக்கும் குழந்தைகளின் மத்தியில் SRS கடலை மிட்டாய் கவரில் வைத்து விற்றாலும் வாங்கி சூட மிட்டாயினை சுவைத்தனர் அன்றைய சிறுவர்கள்.
இவ்வளவு சிறப்புகள் நிறைந்த இந்த அறிய மிட்டாய், 21 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலயே அழிவினை சந்திக்க ஆரம்பித்தது. டாலரின் விலை ஏற்றம் கண்ட காரணத்தினால் Boomer போன்று ஸ்டாண்டர்ட் ஆன விலையில் விற்க முடியாமல் திணறின பல சூட மிட்டாய் நிறுவனங்கள். 10,20 பைசா என்று விலை ஏற்றம் கண்டவுடன் வெங்காயம் போல வாங்க தயங்கினர் மக்கள். இந்த மிட்டாயினை அடுத்த தலைமுறை சுவைக்க வேண்டும் என்ற நல்லெனத்தில் 'POLO' என்ற பன்னாட்டு நிறுவனத்திற்கு செய்முறையினை இலவசமாக கற்று கொடுக்க முடிவு செய்தனர் போதி தர்மரின் புத்திரர்கள். அவர்களுக்கு நமது கை பக்குவம் வந்து விட கூடாது என்ற காரணத்தினால் உளுந்த வடை போன்று ஓட்டை போட்டு நமது Brand இனை நிலை நாட்டினர். தற்பொழுது பல்வேறு நிறுவனங்களால் 100 ருபாய் வரை விற்கப்படும் இந்த சூட மிட்டாயினை கண்டுபிடித்தது போதி தருமர் என்ற தமிழர் என்று பெருமிதம் கொள்வோம்.
இதன் செய்முறை விளக்கம் பற்றி விஜய் தொலைகாட்சியில் கும்கி யானையினை முகாமிற்கு அனுப்பிய பிறகு ஒரு ஞாயிற்று கிழமை ஒளிபரப்பப்படும் என எதிர்பார்க்கபடுகிறது.
நன்றி...இது அய்யோ அம்மா கம்பி வாய மூட்ரா தம்பி வழங்கிய 'சூட மிட்டாய்' பற்றிய டெக்னாலஜி ஆப் இந்தியா ரிப்போர்ட்.!
ஹீரோ பேரு கார்த்திக். ஹீரோயின் ஜெஸ்ஸி. இந்த ரெண்டு பேர வச்சு ஒரு லவ் ஸ்டோரி டெவலப் பண்ணலாம்ன்னு யோசிச்சா கௌதம் மேனன் நம்ம யோசிக்கிற கதைய அப்படியே அல்ரெடி படமா எடுத்திருகாப்ள. சரி கவிஜ எழுதலாம்ன்னு 'நிலா நீ வானம் காற்று...' இத மாத்தி மாத்தி போட்டு மூணு புள்ளி, ஒரு ஆச்சர்யகுறி, ஒரு அடடே சேர்த்து பாத்தா நம்ம வாலி ஏற்கனவே அப்படி ஒரு கவித எழுதிருக்காரு. ஒரு வேளை இத தான் Great men think alike ன்னு வில்லியம் வோர்ட்ஸ்வோர்த் சொல்லிருக்காரோ ?!? சரி நம்ம மேட்டர்க்கு வருவோம்.!
இது அய்யோ அம்மா கம்பி வாய மூட்ரா தம்பி வழங்கும் 'சூட மிட்டாய்' பற்றிய டெக்னாலஜி ஆப் இந்தியா ரிப்போர்ட்.
சூட மிட்டாய்...!!
தமிழகத்தின் தெற்கு மாகாணங்களில் 1990களில் பெட்டி கடைகள் எங்கும் 5 பைசா என்று தமிழக அரசால் நிர்ணயகப்பட்ட விலையில் வட்ட வடிவில் விற்கப்பட்ட மிட்டாய் ஆகும். இதற்கு பெயர் காரணம் திருக்குறளின் 134 ஆம் அதிகாரத்தில் திருவள்ளுவரின் பங்காளியால் விளக்கப்பட்டுள்ளது. குளிரச்சியூட்டும் தன்மை கொண்ட இந்த மிட்டாய் பற்றிய வரலாற்று குறிப்புகள் மதுரையை சுற்றியுள்ள கல்வெட்டுகளில் இன்றளவும் காணப்படுகிறது.
சூடம் எவ்வாறு நெருப்பை சட்டென்று பற்றிகொள்கிறதோ அது போல உண்பவரின் நாவில் ஒட்டி அதன் சுவையை மனதில் சட்டென்று பற்ற வைக்கும் தன்மை கொண்டது சூட மிட்டாய் என்று முட்டி முட்டி சாமியார் முட்டிபுராணத்தில் உவமை குறியீடு எழுதி வைத்துள்ளார்.
1990 களில் பெரும்பாலான பெட்டிகடைகளில் வாழைப்பழம் கட்டிய கயரின் அருகில் ஒரு வெள்ளை நிற பிளாஸ்டிக் பையில் அழகான முறையில் பேக்கிங் செய்யப்பட்டு சூட மிட்டாய் தொங்கவிடபட்டு இருக்கும். வாயில் போட்ட உடனே குளிர்ந்த உணர்வை கொடுத்து கரையும் தன்மை கொண்ட இந்த மிட்டாய், நமது ஈகோ கரைந்தால் தான் எல்லோர் மனதையும் குளிர்விக்க முடியும் என்ற மேலான தத்துவத்தை முன் வைக்கிறது.
கவரினை பிரித்து மிட்டாய்யினை வளர்ப்பு பிராணிகள் போல நக்கும் விளம்பரங்கள் இல்லாமலயே இதனை விற்க முடிந்த Marketing Strategy இன்றளவும் யாவருக்கும் புலப்படவே இல்லை. 72 கவர்களை பிரித்து உள்ளே மிட்டாய் இருக்கிறதா இல்லையா எனத்தேடி நேரத்தை வீணடிக்காமல் கடைக்காரரே மிட்டாயினை தனியாக எடுத்து எண்ணிக் கொடுக்கும் அளவுக்கு நுட்பமான முறையில் இதன் பேக்கிங் அமைந்து இருப்பது இதன் மற்றொரு சிறப்பு.
கடைக்கு செல்லும் அனைவருக்கும் சில்லறை இல்லை என்று சொல்லும் பழக்கம் இல்லாத வணிகர்கள் சூட மிட்டாய் கொண்டு அதை ஈடு கட்டினர். கடும் வெயிலில் Coco Cola, Pepsi, பெருவிரல்கள் மேல் (Thumbs Up ) என்று உடலை செம்மைபடுத்தும் குளிர்பானங்கள் இல்லாத காலகட்டத்தில் 4 சூட மிட்டாய் உண்ட பிறகு தண்ணீர் குடித்து தங்கள் உடலையும் மனதையும் குளுமை படுத்தி கொண்டனர். கிரிக்கெட் விளையாடும் சிறார்கள் தங்கள் சட்டை பைகளில் 1 ரூபாய்க்கு 20 சூட மிட்டாய் வாங்கி ஓவருக்கு ஒரு மிட்டாய் வீதம் அன்றைய காலகட்டதிலயே 20/20 விளையடினர். இவ்வாறு அவர்கள் கணக்கு பாடத்தினையும் எளிதில் கற்றனர். McDonalds, Dominos, KFC என்று ஸ்டிக்கர் ஒட்டினால் தான் அரிசி கூட சாப்பிடுவேன் என்று அடம் பிடிக்கும் குழந்தைகளின் மத்தியில் SRS கடலை மிட்டாய் கவரில் வைத்து விற்றாலும் வாங்கி சூட மிட்டாயினை சுவைத்தனர் அன்றைய சிறுவர்கள்.
இவ்வளவு சிறப்புகள் நிறைந்த இந்த அறிய மிட்டாய், 21 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலயே அழிவினை சந்திக்க ஆரம்பித்தது. டாலரின் விலை ஏற்றம் கண்ட காரணத்தினால் Boomer போன்று ஸ்டாண்டர்ட் ஆன விலையில் விற்க முடியாமல் திணறின பல சூட மிட்டாய் நிறுவனங்கள். 10,20 பைசா என்று விலை ஏற்றம் கண்டவுடன் வெங்காயம் போல வாங்க தயங்கினர் மக்கள். இந்த மிட்டாயினை அடுத்த தலைமுறை சுவைக்க வேண்டும் என்ற நல்லெனத்தில் 'POLO' என்ற பன்னாட்டு நிறுவனத்திற்கு செய்முறையினை இலவசமாக கற்று கொடுக்க முடிவு செய்தனர் போதி தர்மரின் புத்திரர்கள். அவர்களுக்கு நமது கை பக்குவம் வந்து விட கூடாது என்ற காரணத்தினால் உளுந்த வடை போன்று ஓட்டை போட்டு நமது Brand இனை நிலை நாட்டினர். தற்பொழுது பல்வேறு நிறுவனங்களால் 100 ருபாய் வரை விற்கப்படும் இந்த சூட மிட்டாயினை கண்டுபிடித்தது போதி தருமர் என்ற தமிழர் என்று பெருமிதம் கொள்வோம். இதன் செய்முறை விளக்கம் பற்றி விஜய் தொலைகாட்சியில் கும்கி யானையினை முகாமிற்கு அனுப்பிய பிறகு ஒரு ஞாயிற்று கிழமை ஒளிபரப்பப்படும் என எதிர்பார்க்கபடுகிறது.